Roman script
Singers : Shankar Mahadevan and Vandana Srinivasan Music Director : EJ Johnson Lyricist : S Gnanakaravel Humming : …………. Female Part Murada un thaali Adaiyaalum aachu nenjulla Anil kattum veedum Mathipaaga thonum kannula Aridhaaram poosi Pagattaga vaazha thonala Oru vaayi sorum Pasiyaathum namma anbula Male Part Nenachathu nadanthida Pidichathu kidachadume un kooda vantha Oru oru nimisamum ulagatha pidichudume Manakkura siripula mallikai poo thothidume Nee pottukitaa plastic valaiyum platinum aagidume Female Part Haaa murada un thaali Adaiyaalum aachu nenjulla Anil kattum veedum Mathipaaga thonum kannula Male Part Kalyanam aagum munne Kaattaara painjene Unnale aruvi aanen Munthanai koondukulla Pootu ethum podama Adai pattu ponen Female Part Un kaiya puduchu than En thaaya maranthene Un kanna pathu than Kula saami arinjene Male Part Unnoda kutti kutti Santhosam pothum
Pandigai illanaalum summave kondada thonum Female Part Nenachathu nadanthida Pidichathu kidachadume un kooda vantha Oru oru nimisamum ulagatha pidichudume Male Part Hoo ooo Manakkura siripula mallikai poo thothidume Nee pottukitaa plastic valaiyum platinum aagidume Humming : ………….. Female Part Haa…aaa Kannadi unmai pesum Naan munne alagu illai Nee paatha alagi aanen Nenjukul oothupathi Vaasatha pola vanthu Uyiraagi ponen Male Part Unnoda mookuthi Ennoda vinmeenu Kanneerum uppilla Unnaala senthenu Unnoda thristi pokka Karpooram aaven En kanna katikitu unnoda kannala papen Both : Nenachathu nadanthida Pidichathu kidachadume Un kooda vantha Oru oru nimisamum ulagatha pidichudume Oru latcham paravainga manasula paranthidume Nam veetukullla Kadavulin paangalum kangalai thoranthidume Male Part Azhagi en thaali Adaiyaalum aachu nenjulla Anil kattum veedum Mathipaaga thonum kannula Humming : …………..
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாசன் இசையமைப்பாளர் : ஈஜே ஜான்சன் பாடலாசிரியர் : எஸ். ஞானகரவேல் ஹம்மிங் : ................................ பெண் : முரடா உன் தாலி அடையாளம் ஆச்சு நெஞ்சுல அணில் கட்டும் வீடும் மதிப்பாக தோணும் கண்ணுல அரிதாரம் பூசி பகட்டாக வாழ தோனல ஒரு வாயி சோறும் பசியாத்தும் நம்ம அன்புள்ள ஆண் : நெனச்சது நடந்திட பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும் பிளாட்டினம் ஆகிடுமே பெண் : முரடா உன் தாலி அடையாளம் ஆச்சு நெஞ்சுல அணில் கட்டும் வீடும் மதிப்பாக தோணும் கண்ணுல ஆண் : கல்யாணம் ஆகும் முன்னே காட்டாறா பாய்ஞ்சேனே உன்னாலே அருவி ஆனேன் முந்தானை கூண்டுக்குள்ள பூட்டேதும் போடாம அடை பட்டு போனேன் பெண் : ஓ....உன் கைய புடிச்சுதான் என் தாய மறந்தேனே உன் கண்ண பாத்துதான் குல சாமி அறிஞ்சேனே பெண் : உன்னோட குட்டி குட்டி சந்தோசம் போதும் பண்டிகை இல்லனாலும் சும்மாவே கொண்டாட தோணும் பெண் : நெனச்சது நடந்திட பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே ஆண் : ஹோ ஓஒ.... மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும் பிளாட்டினம் ஆகிடுமே ஹம்மிங் : ................................ பெண் : ஹா....ஆ...ஹா....ஆ..... கண்ணாடி உண்மை பேசும் நான் முன்னே அழகு இல்லை நீ பாத்தா அழகி ஆனேன் நெஞ்சுக்குள் ஊதுப்பத்தி வாசத்த போல வந்து உயிராகி போனேன் ஆண் : ஓ.....உன்னோட மூக்குத்தி என்னோட விண்மீனு கண்ணீரும் உப்பில்ல உன்னால செந்தேனு ஆண் : உன்னோட திரிஷ்டி போக்க கற்பூரம் ஆவேன் என் கண்ண கட்டிக்கிட்டு உன்னோட கண்ணால பார்ப்பேன் இருவர் : நெனச்சது நடந்திட பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே ஒரு லட்சம் பறவைங்க மனசுல பறந்திடுமே நம் வீட்டுக்குள்ள கடவுளின் படங்களும் கண்களை தொறந்திடுமே ஆண் : ஓ......அழகி என் தாலி அடையாளம் ஆச்சு நெஞ்சுல அணில் கட்டும் வீடும் மதிப்பாக தோணும் கண்ணுல ஹம்மிங் : ................................
Song information
Singers: Shankar Mahadevan and Vandana Srinivasan
Release information: From Dhonima (2024) · Singer: Shankar Mahadevan and Vandana Srinivasan · Lyricist: S.Gnanakaravel · Music: EJ Johnson
Explore this song
- Singer: Shankar Mahadevan and Vandana Srinivasan
- Film / album: Dhonima