Roman script

Singer : Priya Mali

Music by : Raja Bhavatharini

Female Part

Mayiliragu pola naan

Pozhudhum ilankaatrilae

Midhandhu vilaiyaaduven

Unadhu uyir koottilae

Female Part

Oru kodu kolamaaga

Thunai serum thandhai viralae

Anbilae arigiren kadavulae…

Hmmmm….

Female Part

Mayiliragu pola naan

Pozhudhum ilankaatrilae

Midhandhu vilaiyaaduven

Unadhu uyir koottilae

Female Part

Veyil paravum nodiyil

Unadhu kaigal visiri

Eduthu vandhu veesudhae

Ularugira enadhu mozhiyai

Nalla kavidhai kavidhaiyendru pesudhae

Unadhu kurunchirippil vaanamae…

Uravu mazhai pozhindhu pogudhae

Uzhudhu vidhaitha anbu thaavaram

Uyirai tholaithu kondae neeluthae

Idhayamae… uravilae…

Niraiyuthae… hmmmmm…..

Female Part

Idhuvaraiyil enadhu ulagamendru

Pozhudhum suzhalum anbu dhesamae…

Kumariyena valarndha piragum ennai

Sumandhu thirivathenna pasamae….

Unadhu ninaivu vandhu modhinaal

Odhungi viduvadhenna thaaimadi

Ulaga varaipadathin koduppol

Enaku therivathundhan kaaladi…

Uravilae… uyaruthae…

Uyirkkodi…ohohohooo….

Female Part

Mayiliragu pola naan

Pozhudhum ilankaatrilae

Midhandhu vilaiyaaduven

Unadhu uyir koottilae

தமிழ்

பாடகி : பிரியா மாலி

இசையமைப்பாளர் : ராஜா பவதாரணி

பெண் : மயிலிறகு போல நான்

பொழுதும் இளங்காற்றிலே

மிதந்து விளையாடுவேன்

உனது உயிர் கூட்டிலே

பெண் : ஒரு கோடு கோலமாக

துணை சேரும் தந்தை விரலே

அன்பிலே அறிகிறேன் கடவுளே.....

ஹ்ம்ம்.....

பெண் : மயிலிறகு போல நான்

பொழுதும் இளங்காற்றிலே

மிதந்து விளையாடுவேன்

உனது உயிர் கூட்டிலே

பெண் : வெயில் பரவும் நொடியில்

உனது கைகள் விசிறி

எடுத்து வந்து வீசுதே

உளறுகிற எனது மொழியை

நல்ல கவிதை கவிதையென்று பேசுதே

உனது குறுஞ்சிரிப்பில் வானமே....

உறவு மழை பொழிந்து போகுதே

உழுது விதைத்த அன்பு தாவரம்

உயிரை தொலைத்து கொண்டே நீளுதே

இதயமே.....உறவிலே.....

நிறையுதே......ஹ்ம்ம்மம்ம்ம்.......

பெண் : இதுவரையில் எனது உலகமென்று

பொழுதும் சுழலும் அன்பு தேசமே

குமரியென வளர்ந்த பிறகும் என்னை

சுமந்து திரிவதென்ன பாசமே......

உனது நினைவு வந்து மோதினால்

ஒதுங்கி விடுவதென்ன தாய்மடி

உலக வரைபடத்தின் கோடுபோல்

எனக்கு தெரிவதுதான் காலடி......

உறவிலே......உயருதே....

உயிர்க்கொடி....ஓஹோஹஓஹோ.....

பெண் : மயிலிறகு போல நான்

பொழுதும் இளங்காற்றிலே

மிதந்து விளையாடுவேன்

உனது உயிர் கூட்டிலே

Song information

Singer: Priya Mali

Music by: Raja Bhavatharini

Release information: From Maayanadhi (2020) · Lyricist: Yugabharathi

Explore this song