Roman script

Singers : S. Janaki and P. Susheela

Music by : Usha Khanna

Female Part

Aaa……aa…..aa….aa….aa…..aa….

Female Part

Kangalae kadhal seithaalae paavam

Kaanal neeraalae theeraathu dhaagam

Nenjamae anbu vaiththaalae sogam

Adhu nilaikkaamal kalaigindra megam

Female Part

Kangalae kadhal dheiveega raagam

Kaanal neeralla kaaveri aagum

Nenjamae anbu vaiththaalae paasam

Adhu pirinthaalum maraiyaatha vaasam

Female Part

Kadhal penmaikku pagaiyaanathu

Kaanum unmaikku purampaanathu

Female Part

Kadhal kann pesum mozhiyaavathu

Inba vaazhvukku vazhiyaavathu

Female Part

Pothum pothum alai paayum ullam

Enna kadhal orae soga vellam

Female Part

Kangalae kadhal dheiveega raagam

Kaanal neeralla kaveri aagum

Female Part

Kadhal poovalla mullaanathu

Endrum kaniyalla kallaanathu

Female Part

Kadhal paarvaikku theriyaathathu

Kaalam kaniyaamal puriyaathathu

Female Part

Kadhal vaazhkkai orr poraattamthaano

Kannil vazhiyaatha neerottamthaano

Kangalae kadhal seithaalae paavam

Kaanal neeraalae theeraathu thaagam

Female Part

Kangalae kadhal dheiveega raagam

Kaanal neeralla kaaveri aagum

Nenjamae anbu vaiththaalae paasam

Adhu pirinthaalum maraiyaatha vaasam

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : உஷா கண்ணா

பெண் : ஆஅ.....ஆ......ஆ.....ஆ......ஆ.....ஆ....

பெண் : கண்களே காதல் செய்தாலே பாவம்

கானல் நீராலே தீராது தாகம்

நெஞ்சமே அன்பு வைத்தாலே சோகம்

அது நிலைக்காமல் கலைகின்ற மேகம்

பெண் : கண்களே காதல் தெய்வீக ராகம்

கானல் நீரல்ல காவேரி ஆகும்

நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம்

அது பிரிந்தாலும் மறையாத வாசம்

பெண் : காதல் பெண்மைக்கு பகையானது

காணும் உண்மைக்கு புறம்பானது

பெண் : காதல் கண் பேசும் மொழியாவது

இன்ப வாழ்வுக்கு வழியாவது

பெண் : போதும் போதும் அலை பாயும் உள்ளம்

என்ன காதல் ஒரே சோக வெள்ளம்

பெண் : கண்களே காதல் தெய்வீக ராகம்

கானல் நீரல்ல காவேரி ஆகும்

பெண் : காதல் பூவல்ல முள்ளானது

என்றும் கனியல்ல கல்லானது

பெண் : காதல் பார்வைக்கு தெரியாதது

காலம் கனியாமல் புரியாதது

பெண் : காதல் வாழ்க்கை ஓர் போராட்டம்தானோ

கண்ணில் வழியாத நீரோட்டம்தானோ

கண்களே காதல் செய்தாலே பாவம்

கானல் நீராலே தீராது தாகம்

பெண் : கண்களே காதல் தெய்வீக ராகம்

கானல் நீரல்ல காவேரி ஆகும்

நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம்

அது பிரிந்தாலும் மறையாத வாசம்

Song information

Singers: S. Janaki and P. Susheela

Music by: Usha Khanna

Release information: From Dharmam (1986) · Lyricist: Vaali

Explore this song