தமிழ்

ஆண் : என்ன விலையழகே
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஆண் : என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஆண் : படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
ஆண் : அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி
ஆண் : விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
ஆண் : என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஆண் : உயிரே உனையே நினைந்து
விழி நீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
ஆண் : தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
ஆண் : உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன்னவாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன்னவாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல லலலா
உனை நானும் சேரும் நாள்தான்
ஆண் : என்ன விலையழகே
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

Song details

படம்: காதலர் தினம் (1999)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: உன்னி மேனன்

Album: காதலர் தினம்

Song video

Watch on YouTube