Roman script
Singer : Sujatha Music by : S. A. Raj Kumar Female Part Kaathirunthaalae raaja kumaari Kaathirunthaalae raaja kumaari Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female Part Pallakku angae kaathirukku Pattaadai ingae thavam irukku Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female Part Manam pola maangalyama Periyorin vaarthai yaavum poiyaachu Valai veesuvaar vilai pesuvaar Pennaaga mannil naangal pirandhaachu Female Part Thirumana sandhai koodi irukkudhu Dhevanum varuvana Udalai paarkum aadavar naduvae Ullathai paarpaana Poomaalai naalai yaaridamoo Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female Part Isai medaiyil oru vaathiyam Enai theenda yaarum illai endrathillai Ezhil vanilae ilam venpuraa Paranthaada paadhai indri ponadhillai Female Part Pon oli veesum vennilavae Adi unnidam kurai illaiyaa Kanmanikaaga minmini poochi Thannozhi tharavillaiyaa Yaarodu yaaro yaaro arivaar Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female Part Kaathirunthaalae raaja kumaari Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female Part Pallakku angae kaathirukku Pattaadai ingae thavam irukku Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
தமிழ்
பாடகி : சுஜாதா இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார் பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி ... காத்திருந்தாளே ராஜகுமாரி ... காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு.. பட்டாடை இங்கே தவமிருக்கு.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : மனம் போலவே மாங்கல்யமா.. பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு.. வலை வீசுவார் விலை பேசுவார்.. பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு.. பெண் : திருமண சந்தை கூடி இருக்குது .. தேவனும் வருவானா.. உடலை பார்க்கும் ஆடவர் நடுவே உள்ளத்தை பார்ப்பானா.. பூமாலை நாளை யாரிடமோ.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : இசை மேடையில் ஒரு வாத்தியம்.. எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை.. எழில் வானிலே இளம் வெண் புறா பறந்தாட பாதை இன்றி போனதில்லை... பெண் : பொன்னொளி வீசும் வெண்ணிலவே அடி உன்னிடம் குறை இல்லையா.. கண்மணிக்காக மின்மினி பூச்சி தன்னொளி தரவில்லையா... யாரோடு யாரோ யாரறிவார்.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி ... காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு.. பட்டாடை இங்கே தவமிருக்கு.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா..
Song information
Singer: Sujatha
Music by: S. A. Raj Kumar
Release information: From Suyamvaram (1999) · Singer: Sujatha · Lyricist: Mu. Metha · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Suyamvaram
- Composer: S. A. Raj Kumar