Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part ………………. Chorus ……………….. Female Part Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Ilagiya udal inimai ulaa Idaiyinil oru madhana vizhaa Female Part Muththukkal sevvaayil moodi kidakkum Muththukkal sevvaayil moodi kidakkum Mogaththila penn maangal aadi kalikkum Mogaththila penn maangal aadi kalikkum Female Part Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female Part Vanji kodikal konjum kiligal Paadi aadum kadhal arangamo Vinn meengalo kann meengalo Neeraadum penn meengalo Female Part : Maragathamaniyena madhurasa idhazhgalil Pudhuvitha isai varumo Ilamaiyin pidiyinil Idaiyithu idaiyinil thaalam podumo Female Part Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female Part Muththukkal sevvaayil moodi kidakkum Mogaththila penn maangal aadi kalikkum Aa….aa…aa….aa…aah…aa….aa…. Female Part Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female Part ………….. Chorus ……………. Female Part Intha silaigal anthi kalaigal Kaana vendum naalum unnoduthaan Ingae sugam angae manam Endraadum ennoduthaan Female Part Vizhigalum vizhigalum inaigira pozhuthinil Mozhigalum avasiyamo Vilagiya thiraiyinil vidigira varaiyinil Naalum aadavo Female Part Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female Part Haa….muththukkal sevvaayil moodi kidakkum Mogaththila penn maangal aadi kalikkum Aa….aa…aa….aa…aah…aa….aa….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ......................... குழு : ........................... பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா இளகிய உடல் இனிய பலா இடையினில் ஒரு மதன விழா பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : வஞ்சிக் கொடிகள் கொஞ்சும் கிளிகள் பாடி ஆடும் காதல் அரங்கமோ விண் மீன்களோ கண் மீன்களோ நீராடும் பெண் மீன்களோ பெண் : மரகதமணியென மதுரச இதழ்களில் புதுவித இசை வருமோ இளமையின் பிடியினில் இடையிது இடையினில் தாளம் போடுமோ பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் ஆ....ஆ....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ..... பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : ......................... குழு : ........................... பெண் : இந்த சிலைகள் அந்தி கலைகள் காண வேண்டும் நாளும் உன்னோடுதான் இங்கே சுகம் அங்கே மணம் என்றாடும் என்னோடுதான் பெண் : விழிகளும் விழிகளும் இணைகிற பொழுதினில் மொழிகளும் அவசியமோ விலகிய திரையினில் விடிகிற வரையினில் நாளும் ஆடவோ......... பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : ஹா.......முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் ஆ....ஆ....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ.....
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Panam Penn Pasam (1980) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Panam Penn Pasam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan