Roman script

Singer : Madhu Iyer

Music by : Arrol Corelli

Female Part

Annaandhu paar

Un kangalil natchathiram

Aaraindhu paar

Vaazhvae oru poi siththiram

Female Part

Veen endral vithaiyaaga maaru

Yen endral vidaiyaaga maaru

Naan endral naamaagi eeindradu…uu…

Female : Annaandhu paar

Un kangalil natchathiram

Aaraindhu paar

Vaazhvae oru poi siththiram

Female Part

Sadhi irunthum

Thalaivithi irunthum

Mei kannil poimai theettathae

Female Part

Mull irunthum

Koor kallirunthum

Un paatham pogum

Vazhi maarathae

Female Part

Sumai illa uravu engae

Nee thedu

Thuyarillaa naalai undaa

Indrae kondaadu

Female Part

Pagai endral paniyaaga maaru

Vinai endral sunaiyaaga maaru

Irul endral sudaraagi vilaiyaadu..uu….

Female Part

Annaandhu paar

Un kangalil natchathiram

Female Part

Poovaaga maaru

Naalai yenbadhillai illai

Vaasam veesu

Female Part

Siragaaga maaru

Vaanam yenbadhillai illai

Megam urasu

Female Part

Valiyilla thaaimai engae

Nee thedu

Puyal illaa thooni undaa

Neeyum poraadu

Female Part

Vali endraal madiyaaga maaru

Bayam endral kodiyaaga maaru

Pizhai endral araththodu thallaadu

Female Part

Annaandhu paar

Un kangalil natchathiram

Aaraindhu paar

Vaazhvae oru poi siththiram

தமிழ்

பாடகி : மது ஐயர்

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

பெண் : அண்ணாந்து பார்

உன் கண்களில் நட்சத்திரம்

ஆராய்ந்து பார் வாழ்வே

ஒரு பொய் சித்திரம்

பெண் : வீண் என்றால்

விதையாக மாறு ஏன்

என்றால் விடையாக

மாறு நான் என்றால்

நாமாகி ஈன்றாடு

பெண் : அண்ணாந்து பார்

உன் கண்களில் நட்சத்திரம்

ஆராய்ந்து பார் வாழ்வே

ஒரு பொய் சித்திரம்

பெண் : சதி இருந்தும்

தலை விதி இருந்தும்

மெய் கண்ணில்

பொய்மை தீட்டாதே

பெண் : முள் இருந்தும்

கூர் கல் இருந்தும் உன்

பாதம் போகும் வழி

மாறாதே

பெண் : சுமை இல்லா

உறவு எங்கே நீ தேடு

துயர் இல்லா நாளை

உண்டா இன்றே

கொண்டாடு

பெண் : பகை என்றால்

பனியாக மாறு வினை

என்றால் சுனையாக

மாறு இருள் என்றால்

சுடராகி விளையாடு

பெண் : அண்ணாந்து பார்

உன் கண்களில் நட்சத்திரம்

பெண் : பூவாக மாறு

நாளை என்பதில்லை

இல்லை வாசம் வீசு

பெண் : சிறகாக மாறு

வானம் என்பதில்லை

இல்லை மேகம் உரசு

பெண் : வலியில்லா

தாய்மை எங்கே நீ தேடு

புயல் இல்லா தோனி

உண்டா நீயும் போராடு

பெண் : வலி என்றால்

மடியாக மாறு பயம்

என்றால் கொடியாக

மாறு பிழை என்றால்

அறத்தோடு தள்ளாடு

பெண் : அண்ணாந்து பார்

உன் கண்களில் நட்சத்திரம்

ஆராய்ந்து பார் வாழ்வே

ஒரு பொய் சித்திரம்

Song information

Singer: Madhu Iyer

Music by: Arrol Corelli

Release information: From Savarakathi (2018) · Lyricist: Tamizhachi Thangapandian

Explore this song