தமிழ்

ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
பெண் : அம்மம்மா
முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையில் தான்
ஒரு காவியமே
ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும்
சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல
வந்து வந்து போகும்
பெண் : மோதல் வந்து
ஊடல் வந்து
முட்டிக் கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும்
காயமின்றி வாழும்
ஆண் : இது மாதங்கள்
நாட்கள் செல்ல
பெண் : ஆ...
ஆண் : நிறம் மாறிடும்
பூக்கள் அல்ல..
பெண் : ஆ...
ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
ஆண் : ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல்
இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா..
பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு
தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா
ஆண் : மாமங்காரன் தானே
மாலை போட்டு தானே
மோகம் தீரவே
மெதுவாய் மெதுவாய் தொடலாம்
மீனம்மா...மழை உன்னை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா
குளிர் காய்ச்சல் வரும்
பெண் : அம்மம்மா
வெயில் உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா
உடல் வேர்த்து விடும்
ஆண் : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது
இரு : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது
ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது
பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே
சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது
ஆண் : ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு
ஆண் : துத் துத் துது... துத்
துதுது... துத் துத் துது... துது
ஆண் : மீனம்மா...
உன்னை நேசிக்கவும்
அன்பு வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு
பெண் : அம்மம்மா
உன்னை காதலித்து
புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு
ஆண் : உன்னை தொட்ட
தென்றல் வந்து
என்னை தொட்டு
என்னென்னவோ சங்கதிகள்
சொல்லி விட்டு போக
பெண் : உன் மனமும் என் மனமும்
ஒன்றையொன்று ஏற்றுகொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
ஆண் : இன்று மோகனம்
பாட்டெடுத்தோம்
பெண் : ஆ... ஆ...
ஆண் : முழு மூச்சுடன் காதலித்தோம்
பெண் : ஆ... ஆ...
ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

Song details

படம்: ஆசை (1995)

இசை: தேவா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: பி. உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

Album: ஆசை

Song video

Watch on YouTube